சனி, 22 அக்டோபர், 2011

இரவுகளின் உனக்கான இசைகள்


by Sihabdeen Najimudeen on Tuesday, August 30, 2011 at 12:37am
இரவுகளின் முரட்டுத்
தழுவல்களின்
தப்பிதமான  எனது
கைகளின் வாசிப்பு இது,

காகித வீணையில் -என்
விரல்களின் கானம்,
சுருதி சுத்தம்
குறையாத
இதயத்தின்
இலக்கண வயப்படாத
இன்னுமொரு ராகம்,

கிணற்றின் அருகில்
தேங்கிய சிறிய
தேக்கத்தில் - நீ
நிலவாய்க் குளிப்பாயோ?

விரல்கள் இசை மீட்ட,
விழிகள் நட்டதென
மேகக் குழல் கொண்டுன்
மேனி மறைப்பாயோ?

இருளின் பயம்
துறந்துன் இறுக்கம்
பற்றவென ,
சற்றே இசை கேட்டென்
பக்கம் இசையாயோ?

நிலவே !
காகித வீணையில்- என்
கவிதை இசைகள்,
நாளைய ரசிகனை
லயிக்க வைக்கும்,
அதன் அடிநாதம்
உறைந்திருக்கும்,
உனக்காகவே..........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக