கதைகள்

இவை எனது கதைகள், சொல்ல மறந்தவைகள், சொல்லப் பயந்தவைகள்,
சொல்ல நினைத்தவைகள்,  சொல்லாமல் மறைத்தவைகள் எனப் பலப்பல
கதைகள் ஒவ்வொரு மனிதரிடமும் நிறையவே உறைந்து கிடக்கின்றன.
உரிய அளவில் உருகும் வண்ணம் இதமான இளம் சூட்டில் அல்லது
கொதித்துக் குமுறும் வண்ணமான வெப்பத்தின் வன்மத்தில் அவைகள்
உருகி வடிந்தோட முடியும். எந்தக் கதைஞனது கதையும் இதுவாகவே
இருக்க முடியும்.
அனுபவித்துப் பிரசவியாத அரைகுறைப் பிரசவங்களும் சிலவேளை
அலங்கரித்து ஆடை கோர்த்து, மணிசூட்டி கொலுமண்டபம் வரமுடியும்.
கோமாளிகள் போல் காட்சியளிக்கவும் முடியும்.
ஆனால் அவைகளுக்கான ஆயுட்காலம் அரைகுறை ஆனதே.